முகப்புகோலிவுட்

தாத்தா ஏ.என்.ஆர் ரோலில் நடிக்கும் நாக சைதன்யா

  | March 12, 2018 12:43 IST
Naga Chaitanya Films

துனுக்குகள்

  • நடிகை சாவித்ரியின் பயோபிக்காக உருவாகிறது `நடிகையர் திலகம்'
  • கீர்த்தி சுரேஷ் இதில் சாவித்ரியாக நடிக்கிறார்
  • படம் மார்ச் 31ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
நடிகை சாவித்ரி வாழ்க்கையைத் தழுவி உருவாகும் படத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்திரியாக நடிக்கிறார். இது தெலுங்கில் `மகாநதி', தமிழில் `நடிகையர் திலகம்' எனவும் பைலிங்குவலாகத் தயாராகிறது. கூடவே மலையாளம் மற்றும் இந்தியிலும் வெளியாக இருக்கிறது.

துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவாரகொண்டா, பிரகாஷ் ராஜ், மோகன் பாபு எனப் பலரும் இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தெலுங்கு சினிமா வரலாற்றில் சாவித்ரி - அக்கினேனி நாகேஸ்வர ராவ் கூட்டணி மிகவும் பிரபலமானது. `தேவதாஸ்', `மாயா பஜார்' எனப் பல வெற்றிப் படங்களில் இவர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஏ.என்.ஆர் கதாபாத்திரம் படத்தில் முக்கியமானதாய் இருந்ததால், அந்த ரோலில் அவரது பேரன் நாக சைதான்யா நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை அணுகினர்.

சில வேலை நெருக்கடி காரணமாக அதை ஏற்க முடியாமல் இருந்த நாக சைதான்யா, இப்போது தனது தாத்தா ஏ.என்.ஆராக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். மார்ச் 14, 15 என இரண்டு நாட்களில் நாக சைதன்யா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறதாம். விரைவில் படத்துக்கான வேலைகளை முடித்து மார்ச் 31ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது படக்குழு.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்