விளம்பரம்
முகப்புகோலிவுட்

ரஜினியைத் தொடர்ந்து கமலை சந்தித்த நக்மா

  | September 05, 2017 12:43 IST
Nagma

துனுக்குகள்

  • கமல் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பேசி வருகிறார்
  • கேரள முதல்வரிடம் அரசியல் குறித்து ஆலோசனை கேட்டதாக கூறினார்
  • சமீபத்தில், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் நக்மா
சமீப காலமாகவே நடிகர் ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும், பேட்டிகளிலும், விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் பேசி வருகிறார். கடந்த வாரம் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசிய கமல்ஹாசன், அரசியல் குறித்து ஆலோசனை கேட்டதாக கூறியிருந்தார்.
   
இந்நிலையில், நேற்று (செப்டெம்பர் 4-ஆம் தேதி) பிரபல நடிகையும், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான நக்மா, கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை வீட்டில் சந்தித்து பேசியுள்ளார். கமலை காங்கிரஸ் கட்சியின் பக்கம் இழுப்பதற்காகவே தான் இச்சந்திப்பு என்று தண்டோரா போடப்படுகிறது. சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்தையும் நக்மா சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்