முகப்புகோலிவுட்

நகுலின் ‘செய்’ பட டீஸர்

  | November 14, 2017 10:25 IST
Raj Babu

துனுக்குகள்

  • நகுல் கைவசம் இரண்டு படங்கள் உள்ளது
  • நகுலுக்கு ஜோடியாக ஆஞ்சல் டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்
நாகா வெங்கடேஷின் ‘நாரதன்’ படத்திற்கு பிறகு நடிகர் நகுல் கைவசம் ராஜ் பாபுவின் ‘செய்’ மற்றும் புருஷ் விஜய்குமாரின் ‘பிரம்மா.COM’ என இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘செய்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆஞ்சல் டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் நாசர், பிரகாஷ் ராஜ், அஞ்சலி ராவ், தலைவாசல் விஜய், மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

நிக்ஸ் லோபஸ் இசையமைத்து வரும் இதற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘TRIPPY TURTLE புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

தற்போது, நகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வருகிறது. வெகு விரைவில் ஆடியோ & டிரையிலர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளது ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்