முகப்புகோலிவுட்

வைபவ்வுக்கு ஜோடியான நந்திதா

  | September 20, 2018 17:19 IST
Vaibhav

துனுக்குகள்

  • வைபவ் கைவசம் மூன்று படங்கள் உள்ளது
  • இதில் வைபவ்வுக்கு ஜோடியாக நந்திதா நடிக்கிறார்
  • செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவர் யுவராஜ்
‘மேயாத மான்’ படத்துக்கு பிறகு நடிகர் வைபவ் கைவசம் ‘காட்டேரி, ஆர்.கே - நகர்’ என இரண்டு படங்கள் உள்ளது. தற்போது, மற்றுமொரு புதிய படத்தில் வைபவ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘டானா’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை யுவராஜ் இயக்குகிறார். இவர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். இதில் வைபவ்வுக்கு ஜோடியாக நந்திதா நடிக்கிறார்.

மேலும், முக்கிய வேடங்களில் யோகி பாபு, பாண்டியராஜன், ஹரீஷ் பெராடி நடிக்கின்றனர். இதனை ‘நோபெல் மூவீஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. வெகு விரைவில் இப்படம் குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்