முகப்புகோலிவுட்

நானி, நாகர்ஜுனா இணைந்து நடிக்கும் 'தேவதாஸ்' ரிலீஸ் ப்ளான்

  | July 12, 2018 14:28 IST
Nani

துனுக்குகள்

  • நாகர்ஜுனா, நானி இருவரும் இணைந்து நடித்து வரும் படம் ‘தேவதாஸ்’
  • இதில் நானி டாக்டராக வலம் வரவுள்ளாராம்
  • நாகர்ஜுனாவிற்கு ஜோடியாக ஆகங்க்ஷா சிங் நடித்து வருகிறார்
டோலிவுட்டில் பிரபல நடிகர்களான நாகர்ஜுனா, நானி இருவரும் இணைந்து நடித்து வரும் படம் ‘தேவதாஸ்’ (Devadas). இப்படத்தை இயக்குநர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்கி வருகிறார். இதனை ‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் நாகர்ஜுனா டானாகவும், நானி டாக்டராகவும் நடிக்கின்றனர்.

நானிக்கு ஜோடியாக ராஷ்மிகா மான்டேனாவும், நாகர்ஜுனாவிற்கு ஜோடியாக ஆகங்க்ஷா சிங்கும் நடிக்கிறார்கள். இதற்கு மணிஷர்மா இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது, படத்தை வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், டிரெய்லர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்