முகப்புகோலிவுட்

மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலை விழாவின் மினி டிட் பிட்ஸ்

  | January 07, 2018 17:38 IST
Natchathira Vizha 2018

துனுக்குகள்

  • மலேசியாவில் கடந்த 2 நாட்களாக நட்சத்திர கலை விழா நடைபெற்றது
  • பல முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்
  • ரஜினியுடன் பிரபலங்கள் செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் ஷேரிட்டனர்
நடிகர் சங்க கட்டடத்திற்கு நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் கடந்த இரண்டு நாட்களாக (ஜனவரி 5, 6) நட்சத்திர கலை விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விஷால், விஜய் சேதுபதி உட்பட பல முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
 
 


 
ஆறு அணிகள் பங்கேற்ற நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டு போட்டிகளும் நடந்தது. விழாவின் போது ரஜினியுடன் பிரபலங்கள் செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் ஷேரிட்ட வண்ணமிருந்தனர். விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் டீஸர் மற்றும் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படத்தின் பாடல்களும் வெளியிடப்பட்டது. மேலும், விஷாலின் ‘சண்டக்கோழி 2’ படத்தின் டீஸரை நடிகர்கள் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி இணைந்து ரிலீஸ் செய்தனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்