முகப்புகோலிவுட்

‘ரஜினி 165’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர்

  | August 28, 2018 16:22 IST
Rajinikanth 165 Shooting

துனுக்குகள்

  • இப்படத்தில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக வலம் வரவுள்ளார்
  • இது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் 165-வது படமாம்
  • இதில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளார்
பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக வலம் வரவுள்ளாராம். ரஜினியின் 165-வது படமான இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகனன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங்கில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை நவாசுதீன் சித்திக்கே தனது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்