முகப்புகோலிவுட்

ரஜினி படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் நவாசுதீன் சித்திக்

  | July 18, 2018 19:57 IST
Nawazudddin Siddiqui

துனுக்குகள்

  • ரஜினி கைவசம் ‘2.0’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது
  • தற்போது, 2-ஆம் கட்ட படப்பிடிப்பு டேராடூனில் நடந்து வருகிறது
  • இந்த ஷெடியூல் தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறவுள்ளது
'காலா' படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டேராடூனில் நடக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங்கில் இன்று சிம்ரன் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியானது. மேலும் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் படத்தில் சிம்ரன் இருப்பதை உறுதி செய்துள்ளது.
 
மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்திருப்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்