விளம்பரம்
முகப்புகோலிவுட்

நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் இயல்பானவர், கலகலப்பானவர் - நடிகை நயன்தாரா

  | September 08, 2017 12:53 IST
Velaikkaran

துனுக்குகள்

  • படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன் இருந்தால் நேரம் போவதே தெரியாது
  • நகைச்சுவை செய்து கொண்டே இருப்பார்
  • எவ்வளவு பெரிய வசனம் என்றாலும் பத்தே நிமிடத்தில் அதை மனனம் செய்து விடுவார்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் மலையாள நடிகர் ஃபகத் ஃபாஷில், நடிகர் பிரகாஷ் ராஜ், நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, நகைச்சுவை நடிகர் சதீஷ், நடிகை சினேகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை 'ஜெயம்' மோகன் ராஜா இயக்கி வருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி நடிகை நயன்தாரா சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் கூறும்போது, ‘நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் இயல்பானவர் கலகலப்பானவர். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவர் இருந்தால் நேரம் போவதே எங்களுக்கு தெரியாது. அந்த அளவிற்கு நகைச்சுவை செய்து கொண்டே இருப்பார். எவ்வளவு பெரிய வசனம் என்றாலும் பத்தே நிமிடத்தில் அதை மனனம் செய்து நடித்து விடுவார்” என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்