முகப்புகோலிவுட்

மிரட்டும் “ஐரா” டீசர்

  | January 06, 2019 21:01 IST
Airaa Movie

மறுபடியும் பொட்ட புள்ள பொறந்து இருக்கு அண்ணே

துனுக்குகள்

  • இந்த படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • நயன்தாரா இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்
  • இந்த படத்தில் கலையரசன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்
தமிழ்திரை உலகில் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்கிற மாபெரும் பட்டத்தை பெற்றிருப்பவர் நடிகை நயன்தாரா.
கடின உழைப்பும், திரைத்துறையின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வமும்தான் அவரை இன்றளவும் உட்சபட்ச நட்சத்திரமாக வைத்திருக்கிறது.
 
காதலியாக, கவர்ச்சியாக, மனைவியாக என எந்த கதாபாத்திரத்தையும் பொருத்திக்கொள்ளும் நல்ல திரைக்கலைஞர் அவர். அறம் படத்தில் மிகவும் வித்யாசமான கேரக்டரில் அனைவராலும் ஈர்க்கப்பட்டார்.
 
தற்போது அதேபோல் வித்யாசமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று இரட்டை வேடத்தில்  நடித்திருக்கும் படம் “ஐரா” .
 
 
இப்படத்தின் கதை, திரைக்கதை - பிரியங்கா ரவீந்திரன் எழுதி, கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜே.பீ. மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியான நாளில் இருந்தே இந்த 'ஐரா' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருந்தது.
தற்போது “ஐரா” படத்தின் டீசர் வெளியாகி மிரட்டிக்கொண்டிருக்கிறது.
 
“மறுபடியும் பொட்ட புள்ள பொறந்து இருக்கு அண்ணே “ என்று ஒருவர் அழுதபடியே சொல்கிறார் ஒரு பெண்குழந்தை வளர்ந்து இருக்கும் நெற்பயிரை உரசியபடி நடந்து செல்கிறார். பெயர் என்ன பவானி என்று கலையரசன் சொல்ல நயன்தாரா கண்ணாடி முன் தோன்றுகிறார். இந்த காட்சிகள் எல்லாம்
பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றிக்கொல்லும் வழக்கம் உள்ள ஏதோ அறியாமை நிறைந்த கிராமத்தில் நடக்கும் கதை போல் உள்ளது. அங்கு பிறந்த நயன்தாரா, என்ன மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்கிறார் என்பதே கதைகளமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
 
கிராமத்தில் வாழும் கருத்த பெண்ணாக ஒரு கதாபாத்திரத்திலும் இயல்பான மற்றொரு தோற்றத்திலும் காட்சிகொடுக்கிறார். இடையில் அச்சுறுத்தும் விதமான ஹாரர் திர்ல்லர் காட்சிகள் இடம் பெறுகிறது. இதை பார்க்கும் போது யாரோ ஒருவர் இறந்து பேயாக நயன்தாராவை பின்தொடர்கிறார் என்பது போல் இருக்கிறது.
 
அடுத்தடுத்து வரும் காட்சிகள் அனைத்தும் மிரட்டுகிறது படம் சொல்ல வரும் கரு என்னவென்று புரிந்து  கொள்ள முடியாத அளவிற்கு டீசர் மிரட்டி வருகிறது. படம் எப்போது வெளியாகும் என்கிற ஆவலை தற்போது ஏற்படுத்தியிருக்கிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்