முகப்புகோலிவுட்

நயன்தாரா டபுள் ஆக்ஷனில் நடிக்கும் 'ஐரா' ஷூட்டிங் அப்டேட்

  | December 29, 2018 16:14 IST
Nayanthara

துனுக்குகள்

  • ‘ஐரா’ நயன்தாராவின் கேரியரில் 63-வது படமாம்
  • இதில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார்
  • இதற்கு ‘8 தோட்டாக்கள்’ புகழ் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து வருகிறார்
‘இமைக்கா நொடிகள்' படத்துக்கு பிறகு ‘லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா கைவசம் அஜித்தின் ‘விஸ்வாசம்', சக்ரி டோலட்டியின் ‘கொலையுதிர் காலம்', நிவின் பாலியின் ‘லவ் ஆக்ஷன் டிராமா', சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி', மகேஷ் வெட்டியாரின் ‘கோட்டயம் குர்பானா', அறிவழகன் படம், சர்ஜுனின் ‘ஐரா', சிவகார்த்திகேயன் படம், விஜய் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் ‘ஐரா' நயன்தாராவின் கேரியரில் 63-வது படமாம். ஹாரர் ஜானரில் உருவாகும் இதனை ‘KJR ஸ்டுடியோஸ்' நிறுவனம் சார்பில் கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார். நயன்தாரா டபுள் ஆக்ஷனில் நடிக்கும் இந்த படத்திற்கு ‘8 தோட்டாக்கள்' புகழ் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்