விளம்பரம்
முகப்புகோலிவுட்

டோலிவுட்டிலும் ‘அறம்’ செய்ய விரும்பிய ‘லேடி சூப்பர் ஸ்டார்’

  | October 11, 2017 17:54 IST
Aramm Release Date

துனுக்குகள்

  • நயன்தாரா கைவசம் 8 படங்கள் உள்ளது
  • இதில் லேடி சூப்பர் ஸ்டார் கலெக்டராக நடித்துள்ளார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை ஏ.ஆர்.ரஹ்மான் டிவிட்டினார்
தாஸ் ராமசாமியின் ‘டோரா’ படத்திற்கு பிறகு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா கைவசம், அதர்வாவின் ‘இமைக்கா நொடிகள்’, சக்ரி டோலட்டியின் ‘கொலையுதிர் காலம்’, கோபி நயினாரின் ‘அறம்’, நிவின் பாலியின் ‘லவ் ஆக்ஷன் டிராமா’, சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, நெல்சன் திலீப்குமாரின் ‘கோ கோ’, அறிவழகன் படம், கே.எஸ்.ரவிகுமார் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘அறம்’ படத்தில் நயன்தாரா கலெக்டராக வலம் வரவுள்ளாராம்.

மேலும், ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ் – ரமேஷ், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், கோபி கிருஷ்ணா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை ‘KJR ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார்.

சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட பாடல்களும், ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் டிவிட்டிய ஃபர்ஸ்ட் லுக் டீஸரும் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தை தெலுங்கில் ‘KARTHAVYAM’ என்ற பெயரில் டப் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் இம்மாதம் (அக்டோபர்) இறுதியில் அல்லது நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளனராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்