முகப்புகோலிவுட்

வெளியானது நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ டிரெய்லர்

  | July 05, 2018 19:07 IST
Kolamaavu Kokila Movie

துனுக்குகள்

  • 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா கைவசம் 9 படங்கள் உள்ளது
  • இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்
  • இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம்
பாலகிருஷ்ணாவின் ‘ஜெய் சிம்ஹா’ படத்திற்கு பிறகு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா கைவசம் அஜித்தின் ‘விஸ்வாசம்’, அதர்வாவின் ‘இமைக்கா நொடிகள்’, சக்ரி டோலட்டியின் ‘கொலையுதிர் காலம்’, நிவின் பாலியின் ‘லவ் ஆக்ஷன் டிராமா’, நெல்சன் திலீப்குமாரின் ‘கோலமாவு கோகிலா’, சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’, மகேஷ் வெட்டியாரின் ‘கோட்டயம் குர்பானா’, அறிவழகன் படம், சர்ஜுன் படம் என அடுத்தடுத்து படங்களின் பட்டியல் நீள்கிறது.

இதில் ‘கோலமாவு கோகிலா’ (கோகோ) படத்தில் முக்கிய வேடங்களில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்துள்ள இதற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார், நிர்மல் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் 3 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். இப்பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்