முகப்புகோலிவுட்

தொடங்கியது நயன்தாராவின் 63வது திரைப்படத்தின் ஷூட்டிங்!

  | June 13, 2018 00:28 IST
Nayanthara Next Film

துனுக்குகள்

  • தானே தயாரித்து நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது
  • இவர் இயக்கிய 'லக்ஷ்மி' என்கிற குறும்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது
  • ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், படத்தில் பல விஷயங்கள் உண்டு
'கொலையுதிர் காலம்', 'இமைக்கா நொடிகள்' 'கோலமாவு கோகிலா', தல அஜித்துடன் 'விஸ்வாசம்', தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு திரைப்படம் என தன் கைவசம் பல திரைப்படங்களை வைத்திருக்கும் நடிகை நயன்தாராவின் அடுத்த படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது.

நயன்தாரா நடிக்கும் 63வது திரைப்படமான இப்படத்தை இயக்குபவர் சர்ஜுன். இவர் ஏற்கனவே சத்யராஜ் மற்றும் வரலக்ஷ்மி நடிப்பில் இயக்கியுள்ள 'எச்சரிக்கை - இது மனிதர்கள் நடமாடும் இடம்' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. சென்ற ஆண்டில் இவர் இயக்கிய 'லக்ஷ்மி' என்கிற குறும்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதும், குறிப்பிட்ட தரப்பினரிடையே மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டு சர்ச்சைக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கது. இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் சர்ஜுன் இயக்கிய மற்றொரு குறும்படமான 'மா' குறும்படமும் சமூக வலைதளங்களில் இளைஞர்களிடையே மிக பிரபலம்.

'அறம்' திரைப்படத்திற்கு பின், நயன்தாரா தானே தயாரித்து நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. எமோஷனல் ஹாரர் த்ரில்லர் ஆக உருவாகி வரும் இத்திரைப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டுடியோஸ் ட்விட்டர் வலைதளத்தில் 'இன்று ஷூட்டிங் தொடங்கிவிட்டது' என்றும், 'ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், படத்தில் பல விஷயங்கள் உண்டு' என்றும் ட்வீட் செய்துள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்