விளம்பரம்
முகப்புகோலிவுட்

மீண்டும் தள்ளிப்போன ‘நெஞ்சில் துணிவிருந்தால்’

  | October 12, 2017 17:43 IST
Nenjil Thunivirunthal Release Date

துனுக்குகள்

  • இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் & தெலுங்கிலும் உருவாகியுள்ளது
  • இதன் டீஸர் & பாடல்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது
  • படத்தை நவம்பர் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர்
‘மாவீரன் கிட்டு’ படத்திற்கு பிறகு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. தெலுங்கில் ‘C/O சூர்யா’ என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் டூயட் பாடி ஆடியுள்ளார். இன்னொரு ஹீரோவாக விக்ராந்த் நடித்துள்ளார். மேலும், சூரி, ஹரிஷ் உத்தமன், திலீபன், அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

டி.இமான் இசையமைத்துள்ள இதற்கு லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார், மு.காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கோலிவுட்டில் ‘அன்னை ஃபிலிம் ஃபேக்டரி – ஸ்ரீ சாய் சிரஞ்சீவி ஃபிலிம்ஸ்’ நிறுவனங்களும், டோலிவுட்டில் ‘லக்ஷ்மி நரஷிம்ஹா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனமும் தயாரித்துள்ளது. சமீபத்தில், நடிகர் ஆர்யா டிவிட்டிய டீஸர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட பாடல்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை அதிகரிக்கச் செய்தது. ஏற்கெனவே, படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம். முதலில் படத்தை அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். பின்னர், சில காரணங்களால் நவம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். தற்போது, மீண்டும் படத்தின் ரிலீஸை நவம்பர் 10-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்