முகப்புகோலிவுட்

புக்கிங் தொடங்கிய சில மணித்துளிகளில் சாதனைப்படைத்த அஜித்தின் “நேர்கொண்ட பார்வை”

  | June 12, 2019 17:20 IST
Thala Ajith

துனுக்குகள்

  • எச்.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார்
  • போனிகபூர் இப்படத்தை தயாரிக்கிறார்
  • யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
சிவா இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கள் விழாவை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளியான படம் “விஸ்வாசம்”. இப்படம் சூப்பர் ஹிட் கொடுத்து பொருளாதார ரீதியாக சாதனைப்படைத்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு இந்தியில் வெளியான ‘பிங்க்' படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘நேர் கொண்ட பார்வை' என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
 
போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். வித்யா பாலன், ஆதிக் ரவிச்சந்திரன், ஷர்தா ஸ்ரீநாத், அபிராமி, இன்னும் பலர் நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் நாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ புங்கிங் தொடங்கிய சில மணித்துளிகளிளே அனைத்து சீட்களும் புக்காகி விட்டன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்