முகப்புகோலிவுட்

‘தல’ அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ எப்போது வெளியாகிறது; அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

  | March 25, 2019 17:11 IST
Nerkonda Paarvai Update

துனுக்குகள்

  • இப்படத்தை போனிக் கபூர் தயாரிக்கிறார்
  • இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடிக்கிறார்
  • இப்படத்தில் வித்யா பாலன் நடித்திருக்கிறார்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிக் கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கி வரும் படம் ‘நேர்கொண்ட பார்வை'. இந்த படம் கடந்த ஆண்டும் இந்தியில் வெளியாகிய ‘பிங்க்' படத்தின் ரீமேக் ஆகும். இந்தியில் இந்த படத்தில் அமிதாப் பச்சன் வழக்கறிஞராக சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் எடுக்கப்பட்டு வரும் படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் அஜித்  வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் அஜித்தின் 59வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க அஜித்திற்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்து வருகிறார். பரபரப்பாக நடத்தப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவாக இருக்கிறது.
இப்படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இந்த படம் வெளியாகும் அறிவிப்பு தாமதமானது. தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் போனிக் கபூர் வருகின்ற ஆகஸ்ட் 10 அன்று திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்.
எப்போது படம் வெளியாகும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்