விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் என்ட்ரியான 2 பிரபலங்கள்

  | September 09, 2017 13:30 IST
Bigg Boss Tamil

துனுக்குகள்

  • ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்
  • ரானாவும், அல்லரி நரேஷும் தங்களது பட ப்ரோமோஷனுக்காக என்ட்ரியானார்கள்
  • ‘கதாநாயகன்’ படத்தின் சேட்டிலைட் ரைட்ஸ் ‘விஜய் டிவி’யிடம் தான் உள்ளது
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. இந்நிகழ்ச்சியை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வாரம் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் இருப்பவர்களின் குடும்பத்தினர் வருகையினால் பாச மழை பொழிந்த வண்ணமிருந்தது. ஒவ்வொரு வாரமும் புதிய போட்டியாளர்களும், ஏற்கெனவே வெளியேறியவர்களும் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருக்கும் இந்நிலையில், பிரபல நடிகர் விஷ்ணு விஷாலும், நடிகை கேத்ரின் திரசாவும் வீட்டுக்குள் என்ட்ரியாவது போல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.

ஆனால், விஷ்ணு – கேத்ரின் இருவருமே தங்களது நடிப்பில் நேற்று (செப்டெம்பர் 8-ஆம் தேதி) வெளியாகியிருக்கும் ‘கதாநாயகன்’ படத்தின் ப்ரோமோஷனுக்காகத் தான் சென்றுள்ளார்களாம். முருகானந்தம் இயக்கியுள்ள ‘கதாநாயகன்’ படத்தின் சேட்டிலைட் ரைட்ஸ் ‘விஜய் டிவி’யிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ‘பிக் பாஸ்’ ஷோவில் ஒரு படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரபலங்கள் வந்துள்ளது இதுவே முதன் முறையாம்.

சமீபத்தில், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், நடிகர் ரானா டகுபதி தான் நடித்துள்ள ‘நேனு ராஜு நேனே மந்திரி’ படத்திற்காகவும், அல்லரி நரேஷ் தனது ‘MEDA MEEDHA ABBAYI’ படத்தின் ப்ரோமோஷனுக்காகவும் என்ட்ரியானார்கள். இனி வரும் வாரங்களிலும் இதுபோல ப்ரோமோஷனுக்காக சில பிரபலங்கள் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்