முகப்புகோலிவுட்

‘தேவி 2’வில் இணைந்த 2 ஹீரோயின்ஸ்

  | September 20, 2018 12:04 IST
Devi 2

துனுக்குகள்

  • 'தேவி’ படத்தில் பிரபு தேவா, தமன்னா ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர்
  • 'தேவி’ படத்தின் பார்ட் 2-வுக்காக மீண்டும் கைகோர்க்கும் பிரபு தேவா – விஜய்
  • இதில் முக்கிய வேடத்தில் கோவை சரளா நடிக்கவுள்ளார்
2016-ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான படம் ‘தேவி’. இதில் பிரபு தேவா, தமன்னா ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து சமீபத்தில் பிரபு தேவா – விஜய் கூட்டணியில் வெளியான படம் ‘லக்ஷ்மி’.

தற்போது, மீண்டும் ‘தேவி’ படத்தின் பார்ட் 2-வுக்காக விஜய் - பிரபு தேவா கைகோர்த்துள்ளனர். இதிலும் பிரபு தேவாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறாராம். மேலும், முக்கிய வேடத்தில் கோவை சரளா நடிக்கிறார்.

இதன் ஷூட்டிங் கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் மொரிஷியஸில் துவங்கியது. இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க நித்யா மேனன், எமி ஜாக்சன் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்