கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் டோவினோ தாமஸுக்கு வில்லன் கதாபாத்திரமாம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' மூலம் தயாரித்துள்ளார்.
#Maari2 will release on December 21st as we had announced earlier. Trailer of maari 2 will be released Tom. pic.twitter.com/4phog4tUvs
— Dhanush (@dhanushkraja) December 4, 2018
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை பார்த்த சென்சார் குழு ‘யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ‘ரௌடி பேபி' சிங்கிள் டிராக் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, தனுஷ் ட்விட்டரில் படத்தின் டிரெய்லரை நாளை (டிசம்பர் 5–ஆம் தேதி)-யும், படத்தை டிசம்பர் 21-ஆம் தேதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.