முகப்புகோலிவுட்

"நான் ‘பிக் பாஸ் 2' பார்ப்பதில்லை" ட்விட்டரில் ரசிகருக்கு பதிலளித்த ஓவியா

  | August 24, 2018 16:34 IST
Oviya

துனுக்குகள்

  • விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’ சீசன் 2
  • சீசன் 1-யில் கலந்து கொண்ட பிறகு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார் ஓவியா
  • ரசிகர் ஒருவர் சீசன் 2-வை பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டார்
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’ சீசன் 2. இந்நிகழ்ச்சியை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ‘களவாணி’ படத்தில் நாயகியாக அறிமுகமான ஓவியா, ‘பிக் பாஸ்’ சீசன் 1-யில் கலந்து கொண்ட பிறகு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்து வெளியேறிய பின்பும், ஓவியாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது குறிப்பிடத்தக்கது. சீசன் 2 துவங்கி கிட்டத்திட்ட 60 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், நேற்று தான் பிக் பாஸ் இல்லத்தில் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நடிகை விஜயலட்சுமி களமிறங்கினார்.

இந்நிலையில், ஓவியா தனது ட்வீட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது, ஒரு ரசிகர் “பிக் பாஸ் சீசன் 2-வை பற்றி உங்களுடைய கருத்து என்ன?” என்று ஓவியாவிடம் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ஓவியா “நோ கமெண்ட்ஸ்! நான் பிக் பாஸ் சீசன் 2-வை பார்ப்பதில்லை” என்று பதில் ட்வீட் தட்டியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்