முகப்புகோலிவுட்

'பிக் பாஸ்' சினேகனுக்கு ஜோடியாக இவரா?

  | March 27, 2018 11:48 IST
Bigg Boss Oviya

துனுக்குகள்

  • இதில் ‘பிக் பாஸ்’ புகழ் சினேகன் ஹீரோவாக நடிக்கவுள்ளார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகை ஓவியா வெளியிட்டார்
  • இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது
‘யமுனா’ என்ற படத்தை இயக்கிய இ.வி.கணேஷ் பாபுவின் புதிய படம் ‘பணங்காட்டு நரி’. இதில் ‘பிக் பாஸ்’ புகழ் சினேகன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். ‘ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ்’ நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெறுகிறது.

தற்போது, இப்படத்தில் சினேகனுக்கு ஜோடியாக நடிக்க ‘பிக் பாஸ்’ புகழ் ஓவியாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் – ஓவியா இருவருக்குமே ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகை ஓவியா மலேசியாவில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இப்போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வெகு விரைவில் படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் – பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்