முகப்புகோலிவுட்

18வயதுக்கீழ் உள்ளவர்கள் இந்த ட்ரைலரை பாக்காதீங்க….?

  | February 11, 2019 13:51 IST
90ml Trailer

துனுக்குகள்

  • எஸ்.டி.ஆர் இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
  • இந்த படத்தை அனிதா உதீப் இயக்கி இருக்கிறார்
  • இந்த படத்தில் ஓவியா நடித்திருக்கிறார்
“குளிர் 100 டிகிரி” திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் அனிதா உதீப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘90ml'. இந்த படத்தில் ஓவியா முக்கிய வேடத்தில் நடிக்க, பெண்கள் பட்டாளத்தையே அவர் வழி நடத்துகிறார். “இந்தப் படம், பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பற்றிய கதைன்னு சொன்னாலே, ஏதோ தியாகத்தை, சாதனையைப் பற்றி சொல்ல வரேன்னு நினைச்சுக்குவாங்க. ஆனா, இதுவரைக்கும் எந்தப் படமும் பெண்கள் மனசுக்குள்ளே இருக்கிற உணர்ச்சிகளைப் பற்றி பேசினது இல்லை. இந்தப் படம் ,பெண்களுக்கு இருக்கிற ஆசைகள், உணர்ச்சிகளை எந்த சமரசமும் இல்லாம பேசியிருக்கிறது” என்று சமீபத்தில் இந்த படத்தின் இயக்குநர் அனிதா உதீப் சொல்லியிருந்தார். 
 
இந்த படத்தின் பீர் பிரியாணி பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி சக்க போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இயக்குநர் இந்த படத்தில் சமரசம் இல்லை என்று ஏற்கனவே சொல்லியிருந்தார், ஆனால் இவ்வளவு வெளிப்படையாக இருப்பார்கள் என்று சொல்லவே இல்லையே என இந்த ட்ரைலரை பார்க்கும் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள்.
 

 
ட்ரைலர் தொடங்கும் போதே ஓவியா யாரிடமோ வம்பிழுக்கிறார், “நான் பிக் பாஸையே பார்த்தவண்டா” என மிரட்டுகிறார். நான்கு பெண்கள் ஒன்றாக சேர்ந்து தண்ணியடிக்கும் போது, அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் பெண்களின் உணர்ச்சிகள் வெளிபாடு பற்றியதாக இருக்கிறது. இவர்களின் உரையாடல்களில் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகள் எதுவும் இடம் பெறவில்லை மாறாக அப்பட்டமாக வெளிபடையாகவே இவர்களின் உரையாடல் இருக்கிறது. இந்த படத்திற்கு ஏன் ‘ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது என்பதை ட்ரைலரை பார்க்கும் போது புரிந்துக்கொள்ள முடிகிறது.
 
இந்த பெண்கள், பயன்படுத்தும் வார்த்தைகள் முதற்கொண்டு எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பதை ஒளிவுமறைவு இல்லாமல் காட்டியிருக்கிறார்கள். இவர்களின் சேட்டைகளுக்கேற்ப பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார் எஸ்.டி.ஆர்.  சமூக வலைதளத்தில் இந்த ட்ரைலருக்கும் எதிர்மறையான விமர்சனங்களும் நேர் மறையான விமர்சனங்களும் வரத்தொடங்கிவிட்டது என்பதுதான் தற்போதைய செய்தி. அதைத்தாண்டி இந்த படத்தை திரையில் காண ரசிகர் பட்டாளமே காத்திருக்கிறது என்பது மற்றொரு செய்தி. ஆனால் நிச்சயம் இது 18வயதுக்குட்பட்டவர்கள் பார்க்க வேண்டிய படம் இல்லை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.  
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்