விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘பிக் பாஸ்’ ஓவியா படத்தின் ரிலீஸ் ப்ளான்

  | August 12, 2017 11:36 IST
Oviya Next Film

துனுக்குகள்

  • ‘பிக் பாஸ்’ மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகி
  • ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் ஓவியா 2-வது நாயகியாக நடித்துள்ளார்
  • ‘விஜய் 62’-வில் ஓவியா நடிக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது
‘பிக் பாஸ்’ மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகி ஓவியா நடிப்பில் வெளியான கடைசி தமிழ் படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’. தற்போது, ஓவியா கைவசம் விஷ்ணுவின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்ளது. இதனைத் தொடர்ந்து ‘விஜய் 62’-வில் ஓவியா நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.

இந்நிலையில், ஓவியா தெலுங்கில் நடித்துள்ள முதல் படமான ‘இதி நா லவ் ஸ்டோரி’ படத்திற்கு கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது. இதில் ஹீரோவாக தருண் நடித்துள்ளார். இப்படத்தை ரமேஷ் கோபி என்பவர் இயக்கியுள்ளார். ஸ்ரீநாத் விஜய் இசையமைத்துள்ள இதற்கு கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷங்கர் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘ராம் எண்டர்டெயினர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.வி.பிரகாஷ் தயாரித்துள்ளார். ஏற்கெனவே, படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்