முகப்புகோலிவுட்

கர்நாடகாவில் வெளியாகும் ‘பரியேறும் பெருமாள்’

  | October 10, 2018 14:36 IST
Pariyerum Perumal

துனுக்குகள்

  • கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தமிழ்நாட்டில் வெளியான படம் ‘பரியேறும் பெருமா
  • இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
  • இதில் கதிருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி டூயட் பாடி ஆடியிருந்தார்
கதிர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தமிழ்நாட்டில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்கியிருந்தார். இவர் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.

இப்படத்தை ‘அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா’ போன்ற படங்களை இயக்கிய பா.இரஞ்சித், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்திருந்தார். கதிருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், இப்படத்தில் ஒரு நாய் நடித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இதற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருந்தார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

இந்த படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தை பார்த்து ரசித்த திரையுலக பிரபலங்களும் வெகுவாக பாராட்டினர். தற்போது, இப்படத்தை வருகிற அக்டோபர் 12-ஆம் தேதி கர்நாடகாவில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்