முகப்புகோலிவுட்

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் டிரெய்லர்

  | September 25, 2018 17:11 IST
Pariyerum Perumal

துனுக்குகள்

  • இதில் கதிருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இதன் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தை செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
‘விக்ரம் வேதா’ படத்திற்கு பிறகு நடிகர் கதிர் கைவசம் ஜெகதீசனின் ‘சிகை’, நவீன் நஞ்சுண்டனின் ‘சத்ரு’, மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ என 3 படங்கள் உள்ளது. இதில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.

இப்படத்தை ‘அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா’ போன்ற படங்களை இயக்கிய பா.இரஞ்சித், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். கதிருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி டூயட் பாடி ஆடியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இதற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்