முகப்புகோலிவுட்

பிரபுதேவாவை இயக்குகிறாரா பார்த்திபன்?

  | April 11, 2018 10:58 IST
Prabhu Deva Films

துனுக்குகள்

  • ‘உள்ளே வெளியே’ இரண்டாம் பாகத்தை இயக்க பார்த்திபன் திட்டமிட்டுள்ளார்
  • இதனையடுத்து பார்த்திபன் இயக்கவுள்ள படத்தில் பிரபு தேவா நடிக்கவுள்ளார்
  • பிரபு தேவாவுக்கு பார்த்திபன் கூறிய கதை மிகவும் பிடித்து விட்டதாம்
1993-ஆம் ஆண்டு பார்த்திபன் நடிப்பில் வெளியான படம் ‘உள்ளே வெளியே’. பார்த்திபனே இயக்கியிருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இதன் இரண்டாம் பாகத்தை இயக்க பார்த்திபன் திட்டமிட்டுள்ளார். இதில் இயக்குநர்கள் பார்த்திபன், சமுத்திரக்கனி இணைந்து நடிக்கவுள்ளனர்.

மேலும், முக்கிய வேடங்களில் மம்தா மோகன்தாஸ், எம்.எஸ்.பாஸ்கர், கிஷோர், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிக்கவுள்ளனராம். இதனையடுத்து பார்த்திபன் மற்றுமொரு புதிய படத்தை இயக்க கமிட்டாகியுள்ளாராம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஹீரோவாக ‘கிங் ஆஃப் டான்ஸ்’ பிரபு தேவா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்த்திபன் கூறிய கதை மிகவும் பிடித்து விட்டதால், பிரபு தேவா உடனே கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். வெகு விரைவில் இப்படத்தில் நடிக்கவிருக்கும் இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றவுள்ள தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்