முகப்புகோலிவுட்

ரஜினியின் அரசியல் சூட்சுமம் என்ன தெரியுமா?

  | January 11, 2019 13:46 IST
Petta

துனுக்குகள்

  • ரஜினி, விஜய்சேதுபதி, சசிகுமார் இன்னும் பலர் நடித்துள்ள படம் பேட்ட
  • அனிரூத் இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
  • நேற்று வெளியாகிய இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
தமிழ்நாடு முழுவதும் நேற்று அஜித்தின் விஸ்வாசமும், ரஜினியின் பேட்ட திரைப்படமும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
 
ரஜினி, சிம்ரன், த்ரிஷா சசிகுமார், விஜய்சேதுபதி இன்னும் பலர் நடித்த படம் “பேட்ட”. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. அனிருத்தின் பின்னணி இசை ரஜினியை ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைத்திருக்கிறது.
 
ஹாஸ்டல் வார்டனாக களம் இறங்கி இருக்கிறார் காளி(ரஜினி). நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பழைய ரஜினியை புதிதாக பார்த்தது போல் இருந்தது.

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” புதிதாக  வருபவர்களை துறத்தும்  அரசியல் இங்கு இருந்துதான் தொடங்குகிறது” என்று திரைப்படத்தில் கண்கலங்குவதும்  “பாக்கதான போற இந்த காளியோட ஆட்டத்த” என அடுத்தடுத்த வசனங்களால் தெறிக்கவிட்டிருக்கிறார்.
 
பேட்ட திரைப்படத்தில், கடவுளே சில சூட்சுமங்களை பின்பற்றி தான் வெற்றி பெற்றுள்ளனர் என்று ராமன், வாலி கதையை கூறியிருப்பார்.  அந்த வகையில், ரஜினி தன் அரசியல் பிரவேசத்தில் வெற்றி பெற எப்படிப்பட்ட சூட்சுமங்களை பின்பற்ற போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
இப்படி மாஸ் வசனங்கள் பறக்க 80களில் பார்த்த ரஜினியை மீண்டும் மொத்தமாக பார்த்தது போல் இருந்தது பேட்ட. ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். இத்திரைப்படம் குறித்து ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, 

“பேட்ட திரைப்படம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருப்பது தனக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பேட்ட திரைப்படத்தின் வெற்றிக்கான  பெருமை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜையே சேரும் என்றும் கூறினார்”.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்