முகப்புகோலிவுட்

பாலியல் வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் திரைப்பபிரபலங்கள்

  | March 16, 2019 12:39 IST
Pollachi

துனுக்குகள்

  • விஸ்வரூபம் எடுக்கும் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம்
  • திரைத்துறை பிரபலங்கள் கண்டனம்
  • சின்மயி மீடு விவகாரத்தில் தைரியமாக தனக்கு நடந்த கொடுமையை முன்வைத்தவர்
சமீபத்தில் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 மேற்பட்ட இளம் பெண்களின் ஆபாச வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
 
போலீசாரின் விசாரணையில் இவர்கள் சமூக வலைதளங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுடன் இயல்பாக பேசி நண்பர்களாகி அவர்களை மிரட்டி பாலியல் தொல்லை செய்வதும், பணம் பரிப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதில் ஆளும் கட்சியினருக்கும் தொடர்பிருக்கிறதா என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வழக்கில் அடுத்தடுத்து பல திருப்பங்களும் மர்மங்களும் நிறைந்திருப்பதாகவும், பல இளம் பெண்கள் இவர்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற செய்திகள் வந்துக்கொண்டிருப்பதால் இந்த பிரச்னை தற்போது விஷ்வரூபம் எடுத்திருக்கிறது.  இந்நிலையல்  சினிமா பிரபலங்கள் பலரும் குற்றவாளிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #PollachiSexualAbuse என்று பதிவிட்டு வருகின்றனர்,

பொள்ளாச்சியின் கொடூர பாலியல் வன்முறை குறித்து இயக்குநர் பா. இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தை பதிவு.
 
நடிகரும் பெரியாரிய சிந்தனையாளருமான நடிகர் சத்யராஜ் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.
அதுல்யா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 
டி.இமான், "நம்முடைய இந்த வாழ்க்கை சூழலை நினைத்து வெட்கபட வேண்டிஇருக்கிறது. எங்கு எப்படியானாலும் பெண்களை அடைந்து விடமுடியும் என்று நினைக்கு ஆணாதிக்க வாதிகள் கூட தாயின் கருவறையில் இருந்துதான் வந்திருக்கிறார்கள் என்று உணர வேண்டும். பொள்ளாச்சி சம்பவத்திற்கு நீதி வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.
"பொள்ளாச்சி சம்பவம் கதி கலங்கச் செய்தது! இவ்வன்முறை வருடம் ஒரு முறை வந்தது போய், மாதம்இருமுறையும், வாரம் ஒரு முறையுமாய் வருவது, நீதிமன்றத்தின் கடுமையாக்கப்பட்ட தண்டனைகளால் மட்டுமே மட்டு படுத்தப்படும்!" பார்த்திபன்.
"என்னுடைய நிலைப்பாடு நிஜத்திலும் படத்திலும் எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கும்.  பெண்களுக்கு எதிராக நடக்கும் இத்தகைய கொடூரங்களுக்கு தண்டனை மிகக்கடுமையாக இருக்க வேண்டும்...." என்று ஜெயம் ரவி பதிவிட்டுள்ளார்.
"சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெண்களை கொடூரமாக நாசம் செய்திருப்பது குலைநடுங்க வைக்கிறது. உடனடியாக இந்தக் கொடூரர்களை தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும்." சசிகுமார்.
"மனித போர்வையில் மிருகங்கள். நெஞ்சு பதைக்கிறது. இந்த காம கொடூரர்களுக்கு சட்டத்தையும் மிஞ்சிய தண்டனை வேண்டும். மனிதம் மனதில் ஒரு ஓரத்தில் இருந்திருந்தால் கூட இதை செய்திருக்க மாட்டார்கள். #JudicialProbeForPollachiRapes - this has to become a national issue." ஹிப்பாப் தமிழா..
இதுபோன்ற சம்பவங்கள் திரும்ப திரும்ப நடக்கக்கூடாது. என்று ஹரிஸ் கல்யாண் கூறியிருக்கிறார்.
இசை அமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "I strongly condemn these monsters ... மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது... இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து" என்று பதிவிட்டுள்ளார்.
 
நடிகர் கதிர், "இது போன்ற மனித நேய மற்றவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். அந்தத தண்டனை இது போன்ற குற்ற செயல் நடக்காமல் இருக்கும் அளவிற்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
 
இயக்குநர் சி.வி குமார், "இது போன்ற மிருகங்களை அதிகாரிகள் எப்படி சுதந்திரமாக இந்த சமூகத்தில் விட்டிருக்கிறார்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.
 
நடிகர் சித்தார்த், "பொள்ளாச்சி பாலியல் சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். சமூக வலைதளங்கள் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றவாளிகள் ஒரு போதும் தப்பித்துவிடக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.
 
பாடகி சின்மயி, "பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கும்பலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. நண்பர்களாக பழகி ஏமாற்றி அவர்களை பாலியல் வன்புணர்வு செய்வதோடு அதனை வீடியோ எடுத்து வைத்து அவர்களை மிரட்டியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனையும் இந்த கும்பல் தாக்கி இருக்கிறது" என்று அவர் பதிவிட்டிருக்கிறார்...
  இன்னும் பல பிரபலங்கள் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்..  
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்