முகப்புகோலிவுட்

விஷாலின் ‘அயோக்யா’வில் இணைந்த பூஜா தேவரியா

  | September 24, 2018 13:42 IST
Ayogya Movie

துனுக்குகள்

  • விஷால் கைவசம் மூன்று படங்கள் உள்ளது
  • இதில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்
  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
பி.எஸ்.மித்ரனின் ‘இரும்புத்திரை’ படத்துக்கு பிறகு விஷால் கைவசம் லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’, வெங்கட் மோகனின் ‘அயோக்யா’ மற்றும் இயக்குநர் சுந்தர்.சி படம் என 3 படங்கள் உள்ளது. இதில் ‘அயோக்யா’ படத்தை இயக்கும் வெங்கட் மோகன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.

‘அயோக்யா’-வில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், முக்கிய வேடங்களில் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார் - பார்த்திபன் நடிக்கின்றனர். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இதற்கு கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதனை ‘லைட்ஹவுஸ் மூவி மேக்கர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க பூஜா தேவரியா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்