முகப்புகோலிவுட்

"நீருக்கு அடியில் அதிரடி ஸ்டன்ட்" - விஸ்வரூப அனுபவம் பகிரும் பூஜா குமார்

  | August 07, 2018 18:14 IST
Pooja Kumar Vishwaroopam 2

துனுக்குகள்

  • இதில் கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் நடித்துள்ளனர்
  • படத்தை ஆகஸ்ட் 10-ஆம் தேதி 3 மொழிகளில் ரிலீஸ் செய்யவுள்ளனர்
  • நீருக்கு அடியில் வெடிகுண்டை செயல் இழக்க செய்வது போல் காட்சி இடம்பெறுமாம்
2013-ஆம் ஆண்டு பெரிய போராட்டங்களுக்கு பிறகு ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய ‘விஸ்வரூபம்’ படம் வெளியாகியது. ஹாலிவுட்டிற்கு நிகரான லெவலில் இருந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபிஸிலும் கலெக்ஷன் கிங்காக வசூல் மழை பொழிய வைத்தது. இதன் தொடர்ச்சியாக ரெடியாகியுள்ள படம் ‘விஸ்வரூபம் 2’.

‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதில் உலக நாயகனுடன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் 2 டிரெய்லர்கள், மேக்கிங் வீடியோ மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. படத்தை வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படம் குறித்து நடிகை பூஜா குமார் பேசுகையில் “இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் நான் டூப் போடாமலே நடித்துள்ளேன். கமல்ஹாசன் சாரும், நானும் நீருக்கு அடியில் சென்று வெடிகுண்டை செயல் இழக்கச் செய்வது போல் ஒரு காட்சி படத்தில் இடம்பெறும். அப்போது, நான் துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபடுவது போல் அந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல், நீருக்கு அடியில் சென்று எந்தவொரு இந்திய நடிகையும் ஸ்டன்ட் செய்த மாதிரி எனக்கு தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்