முகப்புகோலிவுட்

ஜெயம் ரவி படத்தில் இணைந்த பூர்ணா

  | August 10, 2018 13:24 IST
Adanga Maru Movie Cast

துனுக்குகள்

  • இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடி வருகிறார்
  • இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்
  • இது ‘ஜெயம்’ ரவியின் கேரியரில் 24-வது படமாம்
சக்தி சவுந்தர் ராஜனின் ‘டிக் டிக் டிக்’ படத்திற்கு பிறகு ‘ஜெயம்’ ரவி, அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேலின் ‘அடங்க மறு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இது ‘ஜெயம்’ ரவியின் கேரியரில் 24-வது படமாம்.

இதில் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடி வருகிறார். இப்படத்தில் ரவி போலீஸாக வலம் வரவுள்ளார். தற்போது, இந்த படத்தில் பிரபல நடிகை பூர்ணா வக்கீல் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்.சி.எஸ் இசையமைக்கும் இதற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. வெகு விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்