முகப்புகோலிவுட்

மூன்றாம் கட்டப்படப்பிடிப்பைத் துவங்கிய பிரபாஸின் ‘சாஹோ’

  | July 12, 2018 17:46 IST
Prabhas  Saaho

துனுக்குகள்

  • இது பிரபாஸின் கேரியரில் 19-வது படமாம்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது
கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிரபாஸ் நடித்த பிரம்மாண்ட படைப்பான எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ மெகா ஹிட்டாகி கோடிக்கணக்கில் வசூல் மழை பொழிந்தது. இதனையடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’. தமிழ், தெலுங்கு,ஹிந்தி, மலையாளம் என ஒரே நேரத்தில் 4 மொழிகளில் தயாராகி வரும் இப்படம் பிரபாஸின் கேரியரில் 19-வது படமாம். இதனை சுஜீத் என்பவர் இயக்கி வருகிறார். ஆக்ஷன் ரொமான்டிக் த்ரில்லரான இதில் ‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷர்தா கபூர் டூயட் பாடி ஆடி வருகிறார்.

மேலும், ‘கத்தி’ புகழ் நீல் நிதின் முகேஷ், சங்கி பாண்டே, அருண் விஜய், ஜாக்கி செராஃப், டினு ஆனந்த், மகேஷ் மஞ்சரேகர், மந்திரா பேடி, ஈவ்லின் ஷர்மா, லால் ஆகியோர் நடிக்கிறார்களாம். ‘UV கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் வம்சி – பிரமோத் இருவரும் இணைந்து ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கின்றனர். ஷங்கர்-எஹ்சான்-லாய் இசையமைத்து வரும் இதற்கு மதி ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஏற்கெனவே, வெளியிடப்பட்ட இதன் மிரட்டலான மாஸ் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

சமீபத்தில், படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு அபு தாபியில் நிறைவு பெற்றது. தற்போது, 3-ஆம் கட்ட படப்பிடிப்பு நேற்று (ஜூலை 11-ஆம் தேதி) முதல் ஹைதராபாத்தில் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் டிரெய்லர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்