முகப்புகோலிவுட்

விஜய் – பிரபுதேவா கூட்டணியில் ‘லக்ஷ்மி’ பட டிரெய்லர்

  | July 05, 2018 18:34 IST
Lakshmi Movie Trailer

துனுக்குகள்

  • இதில் ‘சூப்பர் டான்ஸர் 2016’ ஷோவின் வின்னரான தித்யா நடித்துள்ளார்
  • பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார்
  • 'ஏபிசிடி' படம் போல் நடனத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது
சாய் பல்லவியின் ‘கரு’ படத்திற்கு பிறகு விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘லக்ஷ்மி’. இதில் ஹீரோவாக பிரபு தேவா நடித்துள்ளார். ஏற்கெனவே, பிரபுதேவா – விஜய் காம்போவில் வெளியான ‘தேவி’ சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. ‘லக்ஷ்மி’ படத்தில் ‘கிங் ஆஃப் டான்ஸ்’ பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார்.

‘ஏபிசிடி’ படம் போல் நடனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ‘சூப்பர் டான்ஸர் 2016’ ரியாலிட்டி ஷோவின் வின்னரான தித்யா (Ditya) முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சாம்.சி.எஸ் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் ரெடியாகும் இதனை ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ் – பிரமோத் ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
 

இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். சமீபத்தில், வெளியிடப்பட்ட 2 டீசர்கள் மற்றும் 3 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். இப்பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்