முகப்புகோலிவுட்

பிரபுதேவா வில்லனாக மிரட்டும் 'மெர்குரி' பட டீசர் வெளியானது

  | March 07, 2018 16:00 IST
Mercury Movie

துனுக்குகள்

  • இதில் பிரபு தேவாவுக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம்
  • இப்படத்தை ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது
‘இறைவி’ படத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெர்க்குரி’. இதில் முக்கிய வேடங்களில் சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் ‘கிங் ஆஃப் டான்ஸ்’ பிரபு தேவாவுக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம்.

இப்படத்தில் வசனங்களே கிடையாதாம். சைலண்ட் த்ரில்லராக தயாராகியுள்ள இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஸ்டோண் பென்ச் ஃபிலிம்ஸ் – பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டீசரை பிரபல நடிகர்கள் தனுஷ், நிவின் பாலி, ராணா டகுபதி, ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் தங்களது ட்வீட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்