முகப்புகோலிவுட்

பிரபுதேவாவின் `லக்ஷ்மி' பட இரண்டாவது டீசர்

  | June 14, 2018 20:53 IST
Lakshmi Movie Teaser

துனுக்குகள்

  • விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `லக்ஷ்மி'
  • இதில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், தித்யா பாண்டே நடித்திருக்கிறார்கள்
  • இப்படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியிருக்கிறது
`கரு' படத்திற்குப் பிறகு விஜய் இயக்கியிருக்கும் படம் `லக்ஷ்மி'. பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், தித்யா பாண்டே, கருணாகரன், கோவை சரளா ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். நடனத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது இப்படம்.

இப்படத்தின் டீசர் முன்பே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது இதன் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது. சாம் சி.எஸ். இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
 
பிரபுதேவா - விஜய் கூட்டணியில் உருவான `தேவி' திரைப்படம் ஹிட்டானது. எனவே மீண்டும் இவர்கள் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படம் ஜூலை மாதம் வெளியாகவிருக்கிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்