விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘கும்கி 2’-வுக்கான முதற்கட்ட பணிகளை தொடங்கிய பிரபு சாலமன்

  | September 07, 2017 17:28 IST
Kumki 2

துனுக்குகள்

  • ‘கும்கி’ முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
  • இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் துவங்கியதாக கூறப்பட்டது
  • இதில் நடிக்கவுள்ள நடிகர்களின் தேர்வு இன்னும் ஃபைனல் ஆகவில்லையாம்
2012-ஆம் ஆண்டு விக்ரம் பிரபு – லக்ஷ்மி மேனன் நடிப்பில் வெளியான படம் ’கும்கி’. பிரபு சாலமன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனிலும் வசூல் மழை பொழிந்தது. இதில் தம்பி ராமையா, ஜோ மல்லூரி, அஸ்வின் ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

தற்போது, இதன் இரண்டாம் பாகத்தையும் பிரபு சாலமனே இயக்கவுள்ளாராம். இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் துவங்கியுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வந்தது. இது குறித்து பிரபு சாலமன் மீடியாவிற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், “இன்னும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் தான் தாய்லாந்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், படத்தில் நடிக்கவுள்ள நடிகர்களின் தேர்வும் இன்னும் ஃபைனல் ஆகவில்லை” என்று பிரபு சாலமன் கூறினார்.

பிரபு சாலமன் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி.இமான். ஆனால், ‘கும்கி 2’-விற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைக்கவுள்ளார். முதல் பாகத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாரே இதற்கும் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். வெகு விரைவில் நடிகர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்