முகப்புகோலிவுட்

‘தளபதி 62’வில் ‘விக்ரம் வேதா’ கனெக்ஷன்

  | January 21, 2018 17:07 IST
Vijay 62

துனுக்குகள்

  • கடந்த ஜனவரி 19-ஆம் தேதி துவங்கிய படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெறுகிறது
  • இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடி வருகிறார்
  • நடிகர் பிரேம் ‘விக்ரம் வேதா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்
பரதனின் ‘பைரவா’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடி வருகிறார். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் பூஜையுடன் துவங்கிய படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ‘விக்ரம் வேதா’ புகழ் பிரேம் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை நடிகர் பிரேமே தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டியதோடு, ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏ.ஆர்.முருகதாஸுடன் எடுத்த புகைப்படத்தையும் ஷேரிட்டு உறுதிபடுத்தியுள்ளார். படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம். வெகு விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் நடிக்கவுள்ள இதர நடிகர்களின் பட்டியல் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்