விளம்பரம்
முகப்புகோலிவுட்

‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் என்ட்ரியாகுகிறாரா பிரியா பவானி ஷங்கர்?

  | August 12, 2017 19:32 IST
Priya Bhavani Shankar

துனுக்குகள்

  • ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்
  • ஓவியா & ஜூலி ‘பிக் பாஸ்’ வீட்டைவிட்டு வெளியேறினார்கள்
  • மீண்டும் நிகழ்ச்சியை டாப்பிற்கு கொண்டு வர பிரபல நடிகை என்ட்ரியாகவுள்ளார்
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. இந்நிகழ்ச்சியை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த ஷோவில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஓவியா மற்றும் ஜூலி கடந்த வாரம் இறுதியில் ‘பிக் பாஸ்’ வீட்டைவிட்டு வெளியேறினார்கள். அதிலிருந்து ‘பிக் பாஸ்’ பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்ததாக கூறப்படுகிறது.

அதை சரி செய்து மீண்டும் நிகழ்ச்சியை டாப்பிற்கு கொண்டு வர, சின்னத்திரையில் பிரபலமான நடிகை பிரியா பவானி ஷங்கர் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் என்ட்ரியாகவுள்ளார் என தகவல் பரவி வருகிறது. சமீபத்தில், நடிகை பிந்து மாதவி ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் என்ட்ரியானது குறிப்பிடத்தக்கது. ஆனால், பிரியா பவானி ஷங்கர் இது குறித்து தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் “என்னது நான் ‘பிக் பாஸ்’ வீட்டுக்கு போறேன்னா? என்னுடைய வீட்டிலையே என்னால 10 நாட்கள் கூட சும்மா இருக்க முடியாது. இந்த ஸ்டேட்டஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே” என்று பதிவிட்டுள்ளார்.


பிரியா பவானி ஷங்கர் வெள்ளித்திரையில் அறிமுகமாகும் ரத்ன குமாரின் ‘மேயாத மான்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வரும் இப்படத்தில் ஹீரோவாக வைபவ் நடித்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்