முகப்புகோலிவுட்

'சிம்பா' படத்தில் நடிக்கிறாரா ப்ரியா பிரகாஷ் வாரியர்?

  | March 12, 2018 12:47 IST
Simmba

துனுக்குகள்

  • ரன்வீர் சிங் முதன்முறையாக காக்கி சட்டை அணியப்போகும் படம் இது தானாம்
  • படத்தை இந்தாண்டு டிசம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
  • ‘மாணிக்க மலராய பூவி’ மூலம் ஃபேமஸானவர் பிரியா பிரகாஷ் வாரியர்
பாலிவுட்டில் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ படத்திற்கு பிறகு ரன்வீர் சிங் நடிக்கவுள்ள படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கவுள்ளார். இப்படம் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக்காம். பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்த இந்த படம் டோலிவுட்டில் மெகா ஹிட்டானது. ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் டூயட் பாடி ஆடியிருந்தார். போலீஸாக ஜூனியர் என்.டி.ஆர் நடித்த கேரக்டரில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார்.

ரன்வீர் சிங் முதன்முறையாக காக்கி சட்டை அணியப்போகும் படம் இது தானாம். ‘சிம்பா’ (SIMMBA) என டைட்டில் சூட்டியுள்ள இதனை ‘தர்மா புரொடக்ஷன்ஸ் – ரிலையென்ஸ் எண்டர்டெயின்மெண்ட் – ரோஹித் ஷெட்டி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. தற்போது, ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக ‘ஒரு அடார் லவ்’ எனும் மலையாள பட புகழ் பிரியா பிரகாஷ் வாரியர் நடிக்கவிருப்பதாக பாலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வருகிறது.

‘மாணிக்க மலராய பூவி’ என்ற பாட்டின் மூலம் செம ஃபேமஸானவர் பிரியா பிரகாஷ் வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது. வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘சிம்பா’வை இந்தாண்டு (2018) டிசம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்