முகப்புகோலிவுட்

தமிழில் அறிமுகமாகிறாரா பிரியா பிரகாஷ் வாரியர்?

  | April 12, 2018 11:35 IST
Priya Prakash Varrier Films

துனுக்குகள்

  • ‘சூதுகவ்வும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி
  • ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு நலன் குமாரசாமி திரைக்கதை எழுதியுள்ளார்
  • ‘மாணிக்க மலராய பூவி’ என்ற பாட்டின் மூலம் செம ஃபேமஸானவர் பிரியா
கோலிவுட்டில் விஜய் சேதுபதியின் ‘சூதுகவ்வும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. இதனையடுத்து இவரது இயக்கத்தில் வெளியான படம் ‘காதலும் கடந்து போகும்’. இதிலும் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இவ்விரு படங்களுமே ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, விஜய் சேதுபதி – இயக்குநர் தியாகராஜா குமாரராஜா கூட்டணியில் உருவாகும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு நீலன் கே.சேகர், இயக்குநர் மிஷ்கினுடன் இணைந்து நலன் குமாரசாமி கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார்.  இந்நிலையில், நலன் குமாரசாமி இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ஹீரோயினாக ‘ஒரு அடார் லவ்’ எனும் மலையாள பட புகழ் பிரியா பிரகாஷ் வாரியர் நடிக்கவுள்ளாராம். ‘மாணிக்க மலராய பூவி’ என்ற பாட்டின் மூலம் செம ஃபேமஸானவர் பிரியா பிரகாஷ் வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது. வெகு விரைவில் பிரியா பிரகாஷ் வாரியர் அறிமுகமாகும் இந்த தமிழ் படம் பற்றிய இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்