முகப்புகோலிவுட்

கிறிஸ்துமஸ், பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் குறித்து தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

  | December 07, 2018 18:36 IST
Producer

துனுக்குகள்

  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
  • டிசம்பர் 14-ஆம் தேதி சில திரைப்படங்கள் வரலாம் என்று பேசப்பட்டது
  • ஒரே தேதியில் நிறைய படங்கள் வெளிவருவதால் ஏற்படும் பிரச்சனை குறித்து விளக்க
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 05.12.2018 அன்று நடைபெற்ற புதிய திரைப்படங்கள் வெளியீட்டு குழு கூட்டத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பல தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அதில் வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி அன்று நிறைய திரையரங்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அன்றைய தினம் சில திரைப்படங்கள் வரலாம் என்று பேசப்பட்டது. மேலும், ஒரே தேதியில் நிறைய திரைப்படங்கள் வெளிவருவதால் ஏற்படும் பிரச்சனை குறித்தும், பாதிப்புகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், எந்த தயாரிப்பாளரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில், வருகிற டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 10-ஆம் தேதிகளில் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களது திரைப்படங்கள் விடுமுறை தினத்தன்று (Festival Date) தான் வெளிவர வேண்டும் என்றும், அவ்வாறு வெளிவந்தால் தங்களுக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படாது என்றும் முடிவெடுத்து அவர்கள் விரும்பி கேட்டுக்கொண்டதின் பேரில், தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கண்ட கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் ஆகிய இரு தேதிகளில் தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களது திரைப்படங்களை வெளியீட்டு கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்