முகப்புகோலிவுட்

"தமிழ் சினிமாவில் நிரந்தர வில்லன் இல்லை, அதை நான் பூர்த்தி செய்வேன்" - இந்தர் குமார்

  | April 24, 2018 15:23 IST
Inder Kumar

துனுக்குகள்

  • `குற்றம் 23 ' மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் இந்தர் குமார்
  • ' கொடிவீரன்' படத்தின் மூலம் நடிகரானார்
  • 'சுந்தரபாண்டியன் 2 ' படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார்
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த `குற்றம் 23' மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் இந்தர் குமார். இப்போது தயாரிப்பைத் தொடர்ந்து நடிகராகவும் ட்ராக் பிடித்து பயணிக்கிறார். " நான் நடிக்க வந்தது ஒரு கோ இன்சிடென்ட்தான். `குற்றம் 23' படத்தின் ஷூட்டிங் சமயத்தில் சசிகுமார்தான் என்னைப்பார்த்து விட்டு 'இவர் நம்ம அடுத்த படத்துல (கொடிவீரன்) வில்லனா பண்ணட்டும். இவர் கரெக்டா இருப்பாரு"னு சொன்னார். அப்படி ஆரம்பிச்சது இப்போ `தடம்', `சுந்தரபாண்டியன் 2', விஷால் கூட ஒரு படம்னு தொடர்ந்துகிட்டிருக்கு" என உற்சாகமாகப் பேசுகிறார்.

" `கொடிவீரன்', `தடம்', `சுந்தரபாண்டியன் 2'னு தொடர்ந்து வில்லனாக நடிக்க காரணம்?"

"பெரிய காரணம்னு எதுவும் இல்ல. பட், என்னோட பாடி லாங்குவேஜிற்கு வில்லன் தான் செட் ஆகும்னு தோணுச்சு. சமீபத்தில் நம் தமிழ் சினிமாவில் நிரந்தர வில்லனாக நடிக்க யாருமில்லை. எல்லாரும் ஹீரோ, ஹீரோயின்களாகவே நடிக்கவிரும்பிகிறார்கள். அதனால் அந்த இடைவெளியை பூர்த்திசெய்ய நான் ஆசைப்படுகிறேன்."
"சமீபத்தில் வெளிவந்த படங்களிலிருந்து உங்களை அதிகம் கவர்ந்த வில்லன் யார்?"

"மெர்சல்ல எஸ். ஜே. சூர்யா சார் மிரட்டியிருந்தார். அந்த கேரக்டரே ரொம்ப பவர் ஃபுல்லா இருந்தது."

"நீங்கள் நடிகராக என்ன கற்று கொண்டீர்கள்?"

"நடிப்பது மிகவும் கடினம். அந்த கலைக்கு நாம் 100% நம் உழைப்பை கொடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஒரு தயாரிப்பாளராக படத்தை பார்த்துவிட்டு இந்த மாதிரி காட்சிகள் வேண்டும் என கேட்பது எளிது. ஆனால், அதைத் திரையில் கொண்டு வருவதென்பது மிகக் கடினம்" எனச் சொல்லி சிரிக்கிறார்.

"உங்களைப் பொறுத்த வரை படத்தின் தயாரிப்பாளர்களுக்கு உள்ள பெரிய பொறுப்பு என்ன?"

"படத்தின் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து வெளிவரும் வரை அனைத்துப் பிரச்சனைகளையும் படத்தின் தயாரிப்பாளர் மட்டும்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், இனி அது நிலை மாறும்னு எதிர்பார்க்கிறேன். அதுவும் குறிப்பாகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தத்திற்கு பின் பெரிய மற்றும் வரும்னு எதிர்பார்க்கலாம் அதற்கான முயற்சியில் விஷால், செல்வமணி சார் போன்றவர்கள் ஈடுபற்றுள்ளார்கள். நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போலதான் அதனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவேண்டும். நம்ம இண்டஸ்ட்ரியில் பத்து வருடத்திற்கு முன்பு ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் இருந்தார்கள். ஆனால், இன்று விரல் விட்டு எண்ணும் அளவிற்குத்தான் இருக்கிறார்கள். இதற்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும், வேலை செய்பவர்களுக்கிடையே சரியான புரிதல் இல்லாததுதான் முக்கியக் காரணம். ஆனால் இனி அது மாறும் என நம்புகிறேன்.

"ஒரு படத்தில் தயாரிப்பாளரின் பங்கு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?"

"இயக்குநரின் வேலையில் தயாரிப்பாளர்கள் தலையிடக்கூடாது. ஆனால், நிறைய தயாரிப்பாளர்கள் கதை, நடிகர் நடிகைகள் எனத் தங்களின் எண்ணத்தைப் புகுத்த நினைக்கிறார்கள் அது தவறு. டைரக்ஷன் என்பது ஒரு ஆர்ட். அதை டைரக்டர் செஞ்சா மட்டும்தான் நல்லாயிருக்கும். இயக்குநர்களும் தயாரிப்பாளர்களின் கஷ்டங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். குறித்த நாட்களில் ஷூட்டிங்கை முடிப்பது போன்ற விஷயங்களில் இயக்குநர்கள் கவனமாக இருக்கவேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு வேலை செய்தல் மட்டுமே நல்ல படங்களை மக்களுக்கு தரமுடியும்"

"நீங்கள் தயாரித்து வெற்றிபெற்ற `குற்றம் 23'யை தொடர்ந்து 'தடம்' திரைப்படத்திலும் அருண் விஜயுடன் பணியாற்றுகிறீர்கள். அவருடன் உங்களின் நட்பைப்பற்றி..."

"அருண் விஜய் ஒரு கடின உழைப்பாளி. அவரின் உழைப்பிற்கு அவருக்கு கிடைத்த அங்கீகாரம் மிகவும் கம்மி. ஆனால், `என்னை அறிந்தால்' படத்திற்குப் பின் `குற்றம் 23' போன்ற நல்ல கதைகளை தேர்ந்தேடுத்து நடித்துவருகிறார். `குற்றம் 23' படத்தின் போது நாங்கள் நல்ல நண்பர்கள் ஆனோம். அப்போது அருண் விஜய் ' நம்ம இன்னொரு படம் பண்ணலாம்'னு சொன்னார். அவர் மேலுள்ள நம்பிகையில் `தடம்' படத்தையும் தயாரிக்கிறேன். நிச்சயம் வெற்றி அடையும் என நம்புகிறோம்."

" `தடம்' படத்தை தொடர்ந்து சசிகுமாரின் `சுந்தரபாண்டியன் 2'வையும் தயாரிக்கிறீர்கள்... அந்த படத்தைப் பற்றிய அப்டேட்ஸ்..."

"சுந்தரபாண்டியன் 2 படத்தின் படக்குழுவினர்களைத் தேர்வு செய்துவிட்டோம். `நாடோடிகள் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த ஆண்டு ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது"

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்