முகப்புகோலிவுட்

2 புதிய படங்களை அறிவித்த ‘AAA’ தயாரிப்பாளர்

  | January 20, 2018 11:42 IST
Producer Michael Rayappan

துனுக்குகள்

  • எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான முதல் படம் ‘நாடோடிகள்’
  • ‘கீ’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது
  • இந்நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இரண்டு புதிய படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ் சினிமாவில் ‘குளோபல் இன்ஃபோடேயின்மெண்ட்’ எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான முதல் படம் ‘நாடோடிகள்’. இதனையடுத்து விஷாலின் ‘பட்டத்துயானை’, அதர்வாவின் ‘ஈட்டி’, ஜெயம் ரவியின் ‘மிருதன்’ போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். கடைசியாக இவரது தயாரிப்பில் வெளியான படம் சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.

தற்போது, இந்நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கீ’. அறிமுக இயக்குநர் கலீஸ் என்பவர் இயக்கியுள்ள இதில் ஹீரோவாக ஜீவா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி டூயட் பாடி ஆடியுள்ளார். இன்னொரு ஹீரோயினாக ‘காவியத் தலைவன்’ புகழ் அனைகா சொட்டி நடித்துள்ளாராம்.

இதன் இசை & டிரையிலர் வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 19-ஆம் தேதி) சென்னையில் நடைபெற்றது. அப்போது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பேசுகையில் தனது நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இரண்டு புதிய படங்களை பற்றி அறிவித்தார். இதில் ஒரு படத்தை ‘AAA’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும், இன்னொரு படத்தை ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ இயக்குநர் ஐக்கும் இயக்கவுள்ளனராம். வெகு விரைவில் இவ்விரண்டு படங்கள் குறித்த இதர தகவல்கள் வெளியாகுமாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்