முகப்புகோலிவுட்

‘2.0’ படத்தில் இடம்பெறும் ‘புல்லினங்கால்’ பாடலின் வீடியோ

  | December 07, 2018 19:14 IST
Rajinikanth  2.0

துனுக்குகள்

  • இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியிருந்தா
  • இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
  • பாக்ஸ் ஆஃபீஸிலும் ரூ.500 கோடிக்கு மேல் கல்லா கட்டிய வண்ணமுள்ளது
‘காலா' படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி 3D தொழில்நுட்பத்தில் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியான படம் ‘2.0'. ‘எந்திரன்' படத்தின் 2-ஆம் பாகமான இதனை ஷங்கர் இயக்கியிருந்தார். ‘லைகா புரொடக்ஷன்' நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.

இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியிருந்தார். மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்திருந்தார். ‘இசை புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.
 

இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸிலும் ரூ.500 கோடிக்கு மேல் கல்லா கட்டிய வண்ணமுள்ளது. தற்போது, இப்படத்தில் இடம்பெறும் ‘புல்லினங்கால்' பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்