முகப்புகோலிவுட்

'பியார் பிரேமா காதல்' படத்தில் இடம்பெறும் ‘டோப் டிராக்’ டீசர்

  | June 06, 2018 12:40 IST
Pyaar Prema Kaadhal

துனுக்குகள்

  • இதில் ‘பிக் பாஸ்’ புகழ் ஹரிஷ் – ரைசா ஜோடியாக நடிக்கின்றனர்
  • இதன் ‘ஹை ஆன் லவ்’ சிங்கிள் டிராக் நல்ல வரவேற்பை பெற்றது
  • யுவன் இசையமைத்து வரும் இதற்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்
கோலிவுட்டில் அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பியார் பிரேமா காதல்’. இதில் ‘பிக் பாஸ்’ போட்டியாளர்களான ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் ஜோடியாக நடித்துள்ளனர். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், மணிக்குமரன் சங்கரா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘கே புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘YSR ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்து வருகிறார்.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ‘ஹை ஆன் லவ்’ சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தில் இடம்பெறும் ‘டோப் டிராக்’ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை ஜூன் 9-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்