முகப்புகோலிவுட்

டிரெண்டாகி வரும் ‘R.K – நகர்’ டீஸர்

  | November 07, 2017 10:35 IST
Vaibhav

துனுக்குகள்

  • வெங்கட் பிரபு தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த படம் ‘சென்னை 28-2’
  • இதில் வைபவ்வுக்கு ஜோடியாக சனா டூயட் பாடி ஆடுகிறார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் & டீஸரை வெளியிட்டுள்ளனர்
கோலிவுட்டில் நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட வெங்கட் பிரபு தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த படம் ‘சென்னை – 28 : செகண்ட் இன்னிங்க்ஸ்’. இதனையடுத்து வெங்கட் பிரபு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ மூலம் தயாரிக்கும் இரண்டாவது படம் ‘R.K – நகர்’. இப்படத்தை வெங்கட் பிரபுவின் நீண்ட நாள் சீடரும், ‘வடகறி’ படத்தின் இயக்குநருமான சரவண ராஜன் இயக்குகிறார்.

இதில் ஹீரோவாக வைபவ் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ‘சென்னை – 28 : செகண்ட் இன்னிங்க்ஸ்’ புகழ் சனா டூயட் பாடி ஆடுகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சம்பத் நடிக்கிறார்.
பிரேம்ஜி அமரன் இசையமைக்கும் இதற்கு வெங்கடேஷ்.எஸ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.
 

தற்போது, இன்று (நவம்பர் 7-ஆம் தேதி) தயாரிப்பாளர் வெங்கட் பிரபுவின் பர்த்டே ஸ்பெஷலாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை வெளியிட்டுள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் & டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து டிரெண்டாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. வெகு விரைவில் டிரையிலர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்