முகப்புகோலிவுட்

ஹாரர் ஃபேண்டசி படத்தில் ராய் லக்ஷ்மி

  | November 02, 2018 13:21 IST
Cinderella

துனுக்குகள்

  • நடிகை ராய் லக்ஷ்மி நடிக்கும் புதிய படம் ‘சின்ட்ரெல்லா’
  • இப்படம் ஹாரர் ஃபேண்டசி ஜானரில் உருவாகுகிறதாம்
  • எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவர் வினூ வெங்கடேஷ
பிரபல நடிகை ராய் லக்ஷ்மி நடிக்கும் புதிய படம் ‘சின்ட்ரெல்லா'. இந்த படத்தை அறிமுக இயக்குநர் வினூ வெங்கடேஷ் இயக்குகிறார். இவர் ‘இசை' படத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.

அஸ்வமித்ரா இசையமைத்து வரும் இதற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘SSI புரொடக்ஷன்' என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
 
இப்படம் ஹாரர் ஃபேண்டசி ஜானரில் உருவாகுகிறதாம். இதை ராய் லக்ஷ்மியே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் இது குறித்த இதர அறிவிப்புகள் வெளியிடப்படுமாம்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்