முகப்புகோலிவுட்

பெண்களுக்கு எதிராக நடிகர் ராதா ரவியின் சர்ச்சை பேச்சுக்கு எழும் கடும் கண்டனங்கள்…!

  | March 25, 2019 13:23 IST
Radha Ravi

துனுக்குகள்

  • ராதா ரவி திமுக வில் இருந்து வெளியேற்றம்
  • கொலையுதிர் காலம் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று நடந்தது
  • இந்த படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார்
'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். ராதாரவியின் பேச்சு பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து  நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு திமுக நாளிதழான 'முரசொலி'யில் இடம்பெற்றுள்ளது. மேலும், திமுக தலைவர் ஸ்டாலின்,

“பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.

நடிகை டாப்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 இது தொடர்பாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அன்புள்ள ராதாரவி சார்.  நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் உங்களுக்கு எதிரான இந்த கண்டனக் கடிதத்தில் கையெழுத்திட்டு இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அண்மையில் நீங்கள் வெளிப்படுத்திய முட்டாள்தனமான பேச்சு அதுவும் பெண்களை மையப்படுத்தி நீங்கள் பேசியதை கண்டிக்கிறேன். வளருங்கள் சார். இனிமேல் உங்களை நீங்கள் ரவி என்று மட்டுமே அழைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ராதா என்பது ஒரு பெண்ணின் பெயரல்லவா?. என்று பதிவிட்டிருக்கிறார்.

இன்னும் பல திரைத்துறை கலைஞர்கள் அவருடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்….
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்