முகப்புகோலிவுட்

ஏ.ஆர்.ரஹ்மானின் YM ஸ்டுடியோஸில் நடைபெற்ற ‘பேட்ட’ பட ஷூட்டிங்

  | September 08, 2018 11:56 IST
Petta

துனுக்குகள்

  • ரஜினிகாந்த் கைவசம் ‘2.0’ மற்றும் ‘பேட்ட’ என 2 படங்கள் உள்ளது
  • நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது
  • YM ஸ்டுடியோஸில் 2 பெரிய படப்பிடிப்பு தளங்கள், கிரீன் மேட் ஸ்டுடியோ உள்ளத
பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ என 2 படங்கள் உள்ளது. இதில் ‘பேட்ட’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக வலம் வரவுள்ளாராம்.

ரஜினியின் 165-வது படமான இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். நேற்று வெளியிடப்பட்ட மாஸான ஃபர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது. சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் A.R.கார்டனில் புதிய தொழில்நுட்பகளுடன் கூடிய ‘YM ஸ்டுடியோஸ்’ எனும் படப்பிடிப்பு தளத்தில் தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 2 பெரிய படப்பிடிப்பு தளங்கள், கிரீன் மேட் ஸ்டுடியோ என கிட்டத்திட்ட 200 நபர்கள் தங்கி வேலை செய்யுமளவு ‘YM ஸ்டுடியோஸ்’-யில் வசதி உள்ளதாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்